sunsamayal-com-olive-brinjal-thokku

கத்தரிக்காய்த் தொக்கு

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 10
புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு
மல்லித்தழை – 1 கைப்பிடி அளவு
தேங்காய் – 1 கீற்று
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 6 பல் (விருப்பப்பட்டால்)
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கத்தரிக்காய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், கத்தரிக்காய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
நன்கு வதங்கியதும், புளி, உப்பு சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள். இறக்கி வைத்து, மல்லித்தழை, தேங்காய் சேர்த்துக் கிளறி ஆறவிடுங்கள். ஆறியதும் சற்றுக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, (விரும்பினால்) நசுக்கிய பூண்டு சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, அரைத்த விழுதுடன் கலந்து வையுங்கள்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *