Berry Power Drink-017-min

ஓட்ஸ் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்:

  • ஓட்ஸ் — 2 தேக்கரண்டி
  • ஸ்ட்ராபெர்ரி — 10
  • குளிர்ந்த பால் — ஒரு கப்
  • சீனி — தேவைப்பட்டால்

செய்முறை:

  1. தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
    கடாயில் ஓட்ஸைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். (சூடாகும் வரை வறுத்தால் போதும்).
  2. மிக்ஸி அல்லது ப்ளண்டரில் வறுத்த ஓட்ஸுடன் ஸ்ட்ராபெர்ரி பழம், பால் மற்றும் சீனி ஆகியவற்றைப் போடவும்.
  3. பிறகு அவற்றை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
    டேஸ்டி & ஹெல்தி ஓட்ஸ் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் ரெடி.
  4. ஸ்ட்ராபெர்ரிக்குப் பதிலாக பேரீச்சை மற்றும் வாழைப்பழம் சேர்த்தும் செய்யலாம். விரும்பினால் இத்துடன் பாதாம் அல்லது பாதாம் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம்.
  5. இதை குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுப்பின் சர்க்கரைக்குப் பதிலாக தேன் கலந்து கொடுக்கவும்.