214eb8fb0a1ddd6447749a5448c2c602--indian-desserts-indian-snacks

ஓட்ஸ் லட்டு

தேவையான பொருட்கள்:

  • ஓட்ஸ்- – 1 கப்
  • வெல்லம் — அரை கப்
  • சக்கரை- – அரை கப்
  • நெய் – -அரை கப்
  • ஏலக்காய்- – 2
  • முந்திரி – விருப்பமான அளவு
  • பாதாம் – விருப்பமான அளவு
  • திராட்சை – விருப்பமான அளவு

செய்முறை:

  1. முதலில் முந்திரி, திராட்சை, பாதாம் இவற்றை கடாயில் சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. அதே கடாயில் ஓட்ஸை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
    ஓட்ஸ் ஆறிய உடன் மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும். அதனுடன் வெல்லத்தைச் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று அரைக்கவும்.
  3. இந்தக் கலவையை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு அதனுடன் சர்க்கரைப் பொடி, ஏலக்காய்ப் பொடி, வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் இவற்றை போட்டு நன்றாக கையால் கலந்து கொள்ளவும்.
    நெய்யை உருக்கி ஓட்ஸ் கலவையில் ஊற்றி லட்டாக பிடிக்கவும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *