oats pongal final2

ஓட்ஸ் பொங்கல்

தேவையான பொருட்கள்:

  • ஓட்ஸ் — அரை கப்
  • பாசிப் பருப்பு — கால் கப்
  • முந்திரி — ஆறு
  • சீரகம், மிளகு — ஒரு தேக்கரண்டி
  • நெய், உப்பு — தேவையான அளவு

செய்முறை:

  1. தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். பாசிப் பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும். பின் பாசிப் பருப்பை மலர வேக வைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் ஓட்ஸை போட்டு 5 நொடி வதக்கவும்.
    பின் கால் கப்புக்கு குறைவாக நீர் ஊற்றி ஓட்ஸை வேக வைக்கவும். ஓட்ஸ் குழைந்து வரும் போது,
  3. வேக வைத்த பாசிப் பருப்பு, உப்பு போட்டு சுருள கிளறவும்.
    நெய்யில் சீரகம், மிளகு, முந்திரி சேர்த்து பொரித்து சேர்க்கவும். சுவையான ஓட்ஸ் பொங்கல் தயார்.