oats-paniyaram

ஓட்ஸ் பணியாரம்

தேவையான பொருட்கள்:

  • ஓட்ஸ் — 2 கப்
  • கடலைப் பருப்பு — கால் கப்
  • துவரம் பருப்பு — கால் கப்
  • உளுந்தம்பருப்பு — 2 தேக்கரண்டி
  • வர மிளகாய் — 8
  • வெங்காயம் — 2 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் — 6
  • கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் — சிறிதளவு
  • கொத்துமல்லித் தழை, உப்பு — தேவையான அளவு

செய்முறை:

  1. ஓட்ஸ் பணியாரம் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
    பருப்பு வகைகளை 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் தேவையான உப்பு சேர்த்து மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். ஓட்ஸ் மற்றும் வரமிளகாயை நைஸாக பொடி செய்து கொள்ளவும்.
  2. இந்த இரண்டு கலவையையும் ஒன்றாகக் கலந்து அதனுள் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை, இஞ்சி, சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.
  3. பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி, அதில் இந்த மாவுக் கலவையை ஊற்றவும். இருபுறமும் பணியாரத்தை வேகவிட்டு எடுக்கவும்.
    சுடச்சுட, சத்தான ஓட்ஸ் பணியாரம் ரெடி.