IMG_1616[1]

ஐதரபாத் லோக்மி

தேவையான பொருட்கள்:

  • மைதா- – -1 கப்
  • சோடா உப்பு- – -ஒரு பின்ச்
  • உப்பு- – -தேவைக்கு
  • டால்டா- – 1 டீஸ்பூன்
  • மட்டன் கைமா- – -100 கிராம்
  • சீரகம் – -1/2 ஸ்பூன்
  • வெங்காயம்- – -2
  • பச்சை மிளகாய் – –1
  • இஞ்சி பூண்டு விழுது – -2 டீஸ்பூன்
  • மிளகாய்த் தூள்- – -1 ஸ்பூன்
  • கரம் மசாலா- – -1/2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – -1/4 ஸ்பூன்
  • தனியா தூள்- – -2 ஸ்பூன்
  • கொத்துமல்லி – -சிறிதளவு
  • தயிர்- – -2 ஸ்பூன்
  • பட்டர்- – -3 ஸ்பூன்
  • எண்ணெய் – -பொரித்தெடுக்க

செய்முறை:

  1. மைதாமாவில் சோடா உப்பு, உப்பு, உருக்கிய டால்டா, மிதமான சுடுநீர் சேர்த்து பூரிமாவு போல் பிசைந்து வைக்கவும்.
  2. 2 மணி நேரம் இதனை காற்று புகாதவாறு டப்பாவில் அடைத்து வைக்கவும்.
    கடாயில் பட்டர் உருக்கி சீரகம் சேர்க்கவும்.
  3. பொரிந்ததும் பொடியாய் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  5. பின் கைமாவைச் சேர்த்து சுருள வதக்கவும்.
    பின்னர் தயிர் மற்றும் தூள் வகைகளைச் சேர்த்து சுருளும் வரை வதக்கவும்.
  6. கடைசியில் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
    ஊறிய மாவில் சிறு உருண்டை எடுத்து பூரி மாவு போல் தேய்த்து நடுவில் கைமா 2 ஸ்பூன் சேர்த்து நீள வடிவில் உருட்டவும்.
  7. பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.