lime-thokku

எலுமிச்சைத் தொக்கு

தேவையான பொருட்கள்:

எலுமிச்சம்பழம் – 12
பச்சை மிளகாய் – 6
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
வறுத்துப் பொடித்த வெந்தய – – பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – அரை கப்

செய்முறை:

எலுமிச்சம்பழத்தைக் கழுவி துடைத்து, நறுக்கி, விதைகளை முற்றிலும் நீக்கிவிடுங்கள். அத்துடன் இரண்டாக நறுக்கிய பச்சைமிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிசறி வைத்து, இரண்டு நாட்கள் ஊறவிடுங்கள்.
பின்னர் இதை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்த விழுதைச் சேருங்கள். அத்துடன் மிளகாய்த்தூள், வெந்தயம் பெருங்காயப் பொடி சேர்த்து, சுருளக் கிளறி இறக்குங்கள்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *