உருளை பட்டாணி வறுவல்

உருளை -&- பட்டாணி வறுவல்

தேவையான பொருட்கள்:

வேக வைத்த உருளைக்கிழங்கு- – -4
வேக வைத்த பச்சைப் பட்டாணி – 1 கப்
வெங்காயம்- – -1
தக்காளி- – -1
உப்பு மற்றும் எண்ணெய்- – -தேவைக்கு
கொத்துமல்லித்தழை- – -சிறிது
வரமிளகாய்த்தூள்- – -1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க
கடுகு- – -லு டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு- – -1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- – -சிறிது
நசுக்க வேண்டியவை
இஞ்சி- – -சிறு துண்டு
பூண்டுப்பல்- – -7
சோம்பு- – -1.1/2 டீஸ்பூன்

செய்முறை:

நசுக்க வேண்டிய பொருட்களை நன்கு நசுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு வெங்காயம் மற்றும் நசுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் தக்காளியைப் போட்டு நன்கு மசிக்க வதக்கி மிளகாய்த்தூள் போட்டு எண்ணெயிலேயே வதக்கவும்.
தூள் வாசனை போனதும் உப்பு, உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியைப் போட்டு நன்கு வதக்கவும்.
எண்ணெய் லேசாக பிரிந்து வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.