potato-fry2

உருளைக்கிழங்குத் தொக்கு

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – அரை கிலோ
புளி – 100 கிராம்
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
உப்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – 1 துண்டு
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – அரை கப்

செய்முறை:

உருளைக்கிழங்கை கழுவி துடைத்து, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். புளியை ஒன்றரை கப் கொதிக்கும் நீரில் ஊறவிடுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேருங்கள்.
குறைந்த தீயில் உருளைக்கிழங்கை நன்கு வதக்குங்கள். உருளைக்கிழங்கு பாதியளவு வெந்தபிறகு, புளியைக் கரைத்து, வடிகட்டி சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து, உருளைக்கிழங்கு வேகும்வரை (சிறு தீயில் வைத்து) கிளறுங்கள். உருளைக்கிழங்கு வெந்ததும், நன்கு கிளறி இறக்குங்கள்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *