Kerala traditional

உடுப்பி பைனாப்பிள் கறி

தேவையான பொருட்கள்:

  • பைனாப்பிள் – ஒரு கப்
  • புளி – ஒரு சின்ன எலுமிச்சை அளவு
  • வெல்லம் – 1 1/2 மேசைக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
  • எள் – ஒரு மேசைக்கரண்டி
  • தேங்காய்த் துருவல் – அரை கப்
  • மிளகாய் வற்றல் – 5
  • எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
  • கடுகு – கால் தேக்கரண்டி
  • சீரகம் – கால் தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

  1. புளியை ஊற வைக்கவும். வெல்லம் தயாராக எடுத்து வைக்கவும். பைனாப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கி மூழ்கும் அளவு நீரில் வேக விடவும். எள் மற்றும் மிளகாய் வற்றலை தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து எடுக்கவும்.
  2. இத்துடன் தேங்காய்த் துருவல் சேர்த்து தேவையான நீர் விட்டு விழுதாக அரைக்கவும். பைனாப்பிள் பாதி வெந்ததும் இதில் புளிக்கரைசல், வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து மூடி வேக விடவும். பைனாப்பிள் முழுவதும் வெந்ததும் அரைத்த விழுது, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். கறி சற்று திக்கான பதம் வந்ததும் தாளிப்பைச் சேர்த்து எடுக்கவும். சுவையான பைனாப்பிள் கறி தயார். இனிப்பு, புளிப்பு இரண்டும் பழத்தின் இனிப்பு, புளிப்புக்கு ஏற்றபடி சேர்க்கவும்.
  4. காரமும் அதற்கு ஏற்றபடி மாற்றவும். சில இடங்களில் கிடைக்கும் பழம் நல்ல இனிப்புச் சுவை உள்ளது. அதற்கு ஏற்றபடி அளவுகள் தந்திருக்கிறோம். இதில் கிரேவி திக்காக தேங்காய் மசாலா தவிர ஏதும் இல்லாத காரணத்தால் முடிந்தவரை நீரின் அளவு குறைவாகச் சேர்க்கவும்.