Depositphotos_14838763_m

உடல் பருமனை குறைக்கும் ஓட்ஸ்

கோதுமையை உடைத்தாற்போல இருக்கும் ஒரு தானிய வகையே ஓட்ஸ். இது ரஷ்யா, கனடா, போலந்து போன்ற நாடுகளிலும், இந்தியாவில் இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் விளைகிறது. ஓட்ஸ் பயன்படுத்துவதில் சுவிட்சர்லாந்து மக்களே முதலிடம் வகிக்கிறார்கள். எளிதில் தயாராகக்கூடிய உணவு ஓட்ஸ். காலை உணவுக்கு பலரின் சாய்ஸ் ஓட்ஸ்தான். ஓட்ஸ் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஆரோக்கியத்தைத் தருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
வைட்டமின் இ, துத்தநாகம், நார்ச்சத்து, செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீஸ், புரதம் போன்ற சத்துகளை உள்ளடக்கியது ஓட்ஸ். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்களை அதனால் கட்டுப்படுத்திக் குறைக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஓட்ஸ் குழந்தைகளுக்கு வரும் ஆஸ்துமாவுக்கான வாய்ப்புகளை குறைப்பதாகவும், மாவுச்சத்து அல்லாத உணவுப்பொருட்களோடு ஓட்ஸை சேர்த்துக் கொள்ளும் போது வைட்டமின்கள், தாதுக்கள் அதிக அளவில் கிடைக்கிறது என்று மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது. ஓட்ஸ் என்றாலே கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. ஓட்ஸ் பக்கோடா, ஓட்ஸ் புட்டு, ஓட்ஸ் அல்வா என பல வகைகளில் ஓட்ஸை பயன்படுத்தலாம். இதோ உங்களுக்காக ஓட்ஸ் ரெசிபீஸ்.