இறால் ஸ்பிரிங் ரோல்-720x450

இறால் ஸ்பிரிங் ரோல்

தேவையான பொருட்கள்:

ஸ்பிரிங் ரோல் ஷீட் (spring roll sheet) – 15
இறால் – 15
கேரட் – 1
சாலட் வெள்ளரி – 1
முட்டைக்கோஸ் – 1/4 கப்(மெலிதாக நறுக்கியது)
சின்னவெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 சிறுதுண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயத்தாள் – 2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
வெள்ளை மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி (கறுப்புமிளகுதூளும் சேர்க்கலாம்)
சோயா சாஸ் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சீனி – 1/4 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு – 2 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
ஓரங்களை ஒட்ட:
மைதா – 1 மேசைக்கரண்டி
தண்ணீர் – சிறிதளவு

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து பிசறி வைக்கவும்.
கேரட், சாலட் வெள்ளரியை 2 இன்ச் நீளத்தில் குச்சிகளாக வெட்டவும்.
வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சின்னவெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
முட்டைக்கோஸ், உப்பு, சீனி, மிளகுத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.
சோயா சாஸ் சேர்த்துக் கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
ஸ்ப்ரிங் ரோல் ஷீட் மீது இக்கலவையில் சிறிதளவு வைத்து அதன் மீது ஒரு இறால், சிறிதளவு கேரட், வெள்ளரி வைத்து சுருட்டவும்.
ஓரங்களை மைதா தண்ணீர் கலவையால் ஒட்டி சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *