%e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d

இட்லி மஞ்சூரியன்

 தேவையான பொருட்கள்:

  • 6-8 இட்லி – சதுரமாக கட் செய்தது
  • மைதா – 2 டேபுள்ஸ்பூன்
  • கார்ன் ஃப்ளார்(சோளமாவு) – 1  டேபுள் ஸ்பூன்
  • அரிசி மாவு – 1/2 டேபுள்ஸ்பூன்
  • கடலை மாவு – 1 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு – ருசிக்கு
  • சமையல் சோடா – 1 சிட்டிகை
  • தண்ணீர் – மாவு கலக்க
  • முட்டைகோஸ் – 1 கப் (விரும்பினால்)
  • கருவேப்பிலை – 1 கொத்து
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
  • பூண்டு – 1+1/2  டேபுள்ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கவும்
  • வெங்காயம் – 2 மீடியம் சைஸ்
  • குடை மிளகாய் – 1 பெரியது
  • ரெட் சில்லி சாஸ் –  1 டேபுள்ஸ்பூன்
  • லைட் சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
  • டொமேட்டோ கெட்சப் –  1+1/2 டேபுள்ஸ்பூன்
  • சர்க்கரை – 1 சிட்டிகை
  • அஜினோமோட்டோ – 1 சிட்டிகை
  • உப்பு – தேவைக்கு
  • வெங்காயத்தாள் – 1/4 கப்

  செய்முறை:

  1. இட்லியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  2. வெங்காயம்,குடைமிளகாய் இரண்டையும் பெரிய சதுர துண்டுகளாக வெட்டி வைக்கவும்.வெங்காயத்துன்டுகளை இதழ் இதழாக பிரித்து வைக்கவும்
  3. பூண்டு, பச்சைமிளகாய் இரண்டையும் பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.
  4. ஒரு பாத்திரத்தில் மைதா,சோளமாவு, அரிசி மாவு, கடலை மாவு,மிளகுத்தூள்,உப்பு,சோடா உப்பு, ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பைமீடியமில் வைத்து எண்ணெய்யை நன்றாக சூடு படுத்தவும்.
  6. எண்ணெய் நன்றாக சூடானதும் இட்லியை மாவில் நன்றாகபிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிரமாக பொரித்தெடுக்கவும்.
  7. கடைசியாக பாத்திரத்தில் ஒட்டி கொண்டிருக்கும் மாவில் நீளமாக நறுக்கியமுட்டைகோஸை பிரட்டி  எண்ணெயில் பொறித்து அதனுடன் கருவேப்பிலையையும் சேர்த்து மொரு மொறுப்பாக பொறித்து தனியே எடுத்து வைக்கவும்.
  8. இப்போது ஒரு பேனில் 1+1/2 டேபுள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, மற்றும்மிளகாயையும் சேர்க்கவும்.
  9. பூண்டு சற்று சிவந்ததும் குடைமிளகாய்,வெங்காயம் சேர்த்து கிளறவும்.
  10. 2 நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு விழுது, ரெட் சில்லி சாஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  11. இப்போது சோயாசாஸ், கெட்சப், தேவையான அளவு உப்பு, சிட்டிகை சர்க்கரை,சிட்டிகை அஜினோமோட்டோ சேர்த்து கலக்கவும்.
  12. உடனடியாக பொரித்த இட்லியை போட்டு பிரட்டவும்.
  13. கடைசியாக வெங்காயத்தாளை தூவி ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
  14. பரிமாறும் போது பொறித்து வைத்த முட்டைகோஸ்,கருவேப்பிலை சேர்த்து கொடுத்தால் பார்க்க மட்டும் இல்லங்க சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *