01-ginger-thokku

இஞ்சித் தொக்கு

தேவையான பொருட்கள்:

இஞ்சி – கால் கிலோ
பச்சைமிளகாய் – 50 கிராம்
புளி – 100 கிராம்
வெல்லம் – ஒரு சிறு துண்டு
உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

இஞ்சியை நன்கு கழுவி துடைத்து, தோல் சீவுங்கள். மீண்டும் ஒருமுறை கழுவி, ஈரம் போக நன்கு துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். அரை கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, இஞ்சி, மிளகாயை நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
வதக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், புளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, சற்று சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்த விழுதையும் சேர்த்து, நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *