Assorted milk & plain chocolate in blue bowl
Assorted milk & plain chocolate in blue bowl

ஆரோக்யமான வாழ்வுக்கு உதவும் அத்தி

நம் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள தேவையான பாஸ்பரஸ் உப்பும், எலும்பு மண்டலத்தை வலுவுடன் வைத்துக்கொள்ள போதுமான கால்சியம் உப்பும் நிறைந்த பழம் அத்திப்பழம். கூடவே கார்போஹைட்ரேட் நிறைந்த பழம். மற்ற உலர் பழங்களை விட நான்கு மடங்கு அதிகமான தாவரவகைப் புரதம் அத்திப்பழத்தில் உள்ளது. மெதுவாக ஜீரணமாகும். அத்திப்பழம், நீரிழிவு நோயாளிக்கு ஏற்றது. ரத்தம் திரவ நிலையில் இருக்க பொட்டாசியம் அத்திப்பழத்தில் உள்ளது. அதோடு இதயம் சீராக இயங்கி சுருங்கி விரிவடையத் தேவையான மக்னீசியம் அத்தியில் உள்ளது. புது அத்திப்பழத்தை விட, உலர்ந்த அத்திப்பழத்தில் பலமடங்கு சத்துகள் நிரம்பியுள்ளது. 100 கிராம் அத்தியில் 275 கலோரிகள் கிடைக்கும். மிக உயர்வான பெக்டின் என்னும் நார்ச்சத்து, அத்தியில் அதிகம் உள்ளது. இது உடலிலுள்ள கொலஸ்ட்ரால் அளவைச் சரி செய்வதுடன், நம் உடலில் உள்ள கழிவுகளை உடனே வெளியேற்றும்.
புது அத்திப்பழத்தை விட பத்து மடங்கு அதிகமான சத்துகள் நிறைந்தது உலர்ந்த அத்திப்பழம். எந்த பழத்திலும் இல்லாத அளவு அத்திப்பழத்தில் 1000% கால்சியம் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட உலர்ந்த அத்தியில் கால்சியம் அதிகம்.
உடல் பலவீனமானவர்களுக்கு ஏற்ற பழம் அத்திப்பழம். ரத்த விருத்தியை அதிகரிக்கக்கூடிய இரும்புச்சத்து அத்தியில் உள்ளன. உடல் மெலிந்தவர்கள், சோர்வுற்றவர்கள் தொடர்ந்து அத்திப்பழத்தினைச் சாப்பிட்டு வந்தால் உடல் புத்துணர்ச்சி பெற்று, சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
மூளையில் உள்ள லிம்பிக் சிஸ்டத்தை இப்பழத்திலுள்ள பாஸ்பரஸ் உப்பு துடிப்புடன் செயல்பட உதவுகிறது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், எழுத்தாளர்கள்,
விஞ்ஞானிகளுக்கு ஏற்ற பழம் அத்திப்பழம்.
புற்றுநோயைக் குணமாக்கக்கூடிய பென்ஜல்டிஹைட் (தீமீஸீக்ஷ்ணீறீபீமீலீஹ்பீமீ) என்ற பொருள் அத்தியில் உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். இதிலுள்ள
பைட்டோகெமிக்கல் புற்றுநோய்க்கட்டிகள் உடலில் எங்கு இருந்தாலும் உடனே கரைத்து விடுகிறது.
இது 2013-ம் ஆண்டு அமெரிக்காவில் கண்டறியப்பட்ட உண்மை.
நம் உடல், மனம், மூளை என மூன்றும் ஆரோக்கியமாகத் திகழ நாம் தினமும் அத்திப்பழத்தைச் சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும்.
உலர்ந்த அத்திப்பழம் ஒன்றில் 47 கலோரிகள் உள்ளது.
உலகச்சந்தையில் உலர்ந்த திராட்சை, பேரீச்சைகளை விட அத்திப்பழமே அதிக அளவில் விற்பனையாகிறது.
இவ்வளவு ஆரோக்கியம் தரும் அத்திப்பழத்தைக் கொண்டு நம் வீட்டிலேயே செய்து சுவைக்கக்கூடிய சில
ரெசிபீஸ்களைக் காண்போம். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.