1486060215

ஆந்திரா எக் கறி

தேவையான பொருட்கள்:

 • உருளைக்கிழங்கு – 2
 • தேங்காய்த் துருவல் – ஒரு கப்
 • மஞ்சள், மல்லி, சீரக, மிளகாய்ப் பொடிகள் – தலா ஒரு தேக்கரண்டி
 • புளித் தண்ணீர் – 2 கப்
 • முட்டை – நான்கு
 • எண்ணெய் – தாளிக்க
 • உப்பு – தேவைக்கு
 • வரமிளகாய் – 2
 • சீரகம் – ஒரு தேக்கரண்டி
 • பச்சை மிளகாய் – 3
 • பூண்டு – 6 பல்
 • கறிவேப்பிலை – 10 இதழ்
 • தனியா விதை – அரைத் தேக்கரண்டி
 • வெந்தயம் – அரைத் தேக்கரண்டி
 • பெரிய வெங்காயம் – பாதி

செய்முறை:

 1. முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்து, முட்டையை வேக வைத்துக் கொள்ளவும்.
 2. கடாயில் எண்ணெய் ஊற்றி, வரமிளகாய், சீரகத்தைச் சேர்த்து தாளிக்கவும்.
 3. அடுத்து ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்க வேண்டிய பொருட்களைப் போட்டு கடைசியாக வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
 4. பின் மஞ்சள் பொடி, உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு பிரட்டவும்.
 5. 5 நிமிடம் கழித்து பொடி வகைகளைச் சேர்த்து, தண்ணீர் தெளித்து 5 நிமிடம் பச்சைவாசம் போகும்வரை வதக்கவும். பின் புளித் தண்ணீரை சேர்த்து ஒன்று சேரப் பிரட்டி, மூடி பத்து நிமிடம் அப்படியே வைக்கவும்.
 6. முட்டையைக் கீறி எண்ணெய் பிரிந்து வந்த கறியில் சேர்த்துக் கிளறவும்.சுவையான எக் கறி தயார். இது சாதத்திற்குப் பிசைந்து சாப்பிட மற்றும் பருப்புசாதத்துடன் தொட்டுச் சாப்பிட ஏற்றது.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *