100_4888

அல்லம் பச்சடி

தேவையான பொருட்கள்:

 • தேங்காய்ப் பல் – கால் கப்
 • பச்சைமிளகாய் – 2
 • காய்ந்த மிளகாய் – 3
 • இஞ்சி – 2 அங்குலத் துண்டு
 • புளி – நெல்லிக்காய் அளவு
 • வெல்லம் – 2 தேக்கரண்டி
 • கடுகு – கால் தேக்கரண்டி
 • பெருங்காயம் – ஒரு சிட்டிகை
 • கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
 • எண்ணெய் – 2 தேக்கரண்டி
 • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

 1. தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  இஞ்சியுடன், தேங்காய், புளி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும்.
 2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளிக்கவும்.
  தாளித்தவற்றை அரைத்தவற்றுடன் சேர்த்துக் கலக்கவும்.
 3. சுவையான அல்லம் பச்சடி தயார்.