mysore_bonda

அப்பக்கா

தேவையான பொருட்கள்:

  • புழுங்கல் அரிசி – 2 கப்
  • புளித்த தயிர் – 2 கப்
  • கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
  • துருவிய தேங்காய் – ஒரு மூடி
  • மிளகாய் வற்றல் – 6
  • உப்பு – ஒரு தேக்கரண்டி
  • பெருங்காயம் – கால் தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • எண்ணெய் – 250 கிராம்

செய்முறை:

  1. புழுங்கல் அரிசியைக் களைந்து எடுத்து புளித்த தயிரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. புழுங்கல் அரிசி ஊறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அதனுடன் ஊறிய கடலைப்பருப்பைச் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  3. அதே மிக்ஸியில் சிவப்பு மிளகாய், தேங்காய்த் துருவல், பெருங்காயப்பொடி ஆகியவற்றை நைஸாக அரைத்து எடுக்கவும்.
  4. அரிசி, பருப்புக் கலவையுடன் தேங்காய், மிளகாய் விழுதைச் சேர்த்து கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிப் போட்டு கலக்கவும். மாவு உருட்டிப் போடும் பக்குவத்தில் இருக்க வேண்டும்.
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை எடுத்து தட்டிப் போடவும். சிவந்ததும் எண்ணெயை வடித்து எடுத்து வைக்கவும்.
  6. சுவையான அப்பக்கா தயார்.