IMG_4033

அத்தி மைசூர்பாக்

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு — 100 கிராம்
  • உலர்ந்த அத்திப்பழம் — 5
  • நாட்டுச் சர்க்கரை – 150 கிராம்
  • நெய் — 50 மி.லி.
  • வறுத்த முந்திரி — 5

செய்முறை:

  1. நறுக்கிய அத்திப்பழத்தை வெது வெதுப்பான நீரில் ஊறவைத்து தண்ணீர் வடித்து அரைத்துக்கொள்ளவும். கடாயில் நெய்யைச் சேர்த்து, சூடானதும் கடலைமாவைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை, மிதமான சூட்டில் வறுக்கவும்.
  2. நாட்டுச் சர்க்கரையில் சிறிது தண்ணீர் சேர்த்து, கட்டியில்லாமல் கரைத்து, பாகு காய்ச்சிக் கொள்ளவும். இதனுடன் அரைத்த அத்திப்பழ விழுது, வறுத்த கடலைமாவைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இந்தக் கலவையை மிதமான சூட்டில் கிளறவும்.
  3. தேவைக்கேற்ப நெய்யைச் சேர்த்து கடாயில் ஒட்டாமல் கிளறவும். நெய்யைத் தட்டில் தடவி, கிளறிய கடலைமாவுக் கலவையைச் சேர்த்து பரப்பி விடவும். சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பொடித்த, வறுத்த முந்திரியை நறுக்கிய துண்டுகள் மேல் சேர்த்து, அலங்கரித்துச் சுவைக்கவும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *