anjeer-mawa-roll-3

அத்தி மாவா / கோவா ரோல்

தேவையான பொருட்கள்:

  • உலர்ந்த அத்திப்பழம் — 7
  • பனங்கற்கண்டு — தேவையான அளவு
  • பேரீச்சம் பழம் — 5 ( கொட்டை நீக்கியது )
  • தேன் — சிறிதளவு
  • நெய் — 1 மேசைக்கரண்டி
  • மாவா / கோவா — 100 கிராம்
  • பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி — 2 மேசைக்கரண்டி

செய்முறை:

  1. மூடி வைத்த பாத்திரத்திலோ (அ) இட்லி பானைத் தட்டிலோ வைத்து வேக வைக்கவும். சுமார் அரை பதம் வெந்தால் போதும். வெந்தவற்றை நன்கு மைய அரைக்கவும். பொடித்து வைத்த பனங்கற்கண்டில் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு செய்து கொள்ளவும். பாகு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டாம்.
  2. கடாயில் நெய் சேர்த்து, அரைத்த விழுது, பாகையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இதனுடன் பொடித்த மாவா/ கோவாவைச் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். கூடவே நறுக்கிய பாதாம் & முந்திரி சேர்த்து மிக்ஸ் செய்யவும். இக்கலவை கெட்டியாக வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
    அகலமான தட்டில் சிறிது நெய் தடவவும்.
  3. சூடு ஆறியவுடன் வேக வைத்த கலவையுடன் தேனைச் சேர்த்து தடவவும். இதனைத் தட்டில் சேர்த்து அதிகம் அழுத்தாமல் லேசாகத் தட்டிக்கொள்ளவும். பார்ப்பதற்குப் பளபளவென இருக்கும். நீளமான சற்று அகலமான கீத்துக்கள் போட்டு, லேசாக சுருட்டிக்கொள்ளவும். சுவையான அத்தி, மாவா / கோவா ரோல் ரெடி.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *