cracked wheat payasam

அத்தி – தேங்காய்ப் பாயசம்

தேவையான பொருட்கள்:

  • பாசிப்பயறு — 50 கிராம்
  • வெல்லம் — 100 கிராம்
  • நறுக்கிய அத்திப்பழம் — 5
  • நெய் — 1 மேசைக்கரண்டி
  • தேங்காய்ப்பால் — 100 மி.லி.
  • நறுக்கிய முந்திரி — 3
  • ஏலக்காய்த்தூள் — 1 சிட்டிகை
  • ஆறிய பால் — 50 மி.லி.

செய்முறை:

  1. சுமார் 200 மி.லி. தண்ணீர் சேர்த்து, கழுவி சுத்தம் செய்த பாசிப்பயறைக் குக்கரில் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் நெய் சேர்த்து பொடியாக நறுக்கிய அத்திப்பழம், முந்திரியை வதக்கி, தனியே எடுத்து வைக்கவும். வேக வைத்த பாசிப்பயறை நெய்யில் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
  2. அதனுடன் பால், நன்கு பொடித்த வெல்லத்தைச் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து லேசாக கொதிக்க விடவும். கூடவே நெய்யில் வறுத்த அத்திப்பழம், முந்திரியைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். வாசனைக்கு ஏலக்காய்த்தூளைச் சேர்த்து மிக்ஸ் செய்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *