DSC_2817

அத்தி சாலட்

தேவையான பொருட்கள்:

  • ஃப்ரஷ் அத்திப்பழம் — 4
  • ஆப்பிள் துண்டுகள் — 50 கிராம்
  • மாதுளை முத்துகள் — 50 கிராம்
  • தேன் — ½  மேசைக்கரண்டி
  • மிளகுத்தூள் –½  டீஸ்பூன்
  • வாழைப்பழத்துண்டுகள் — 100 கிராம்
  • தேங்காய்த்துருவல் — 2 மேசைக்கரண்டி

செய்முறை:

  1. கழுவிச் சுத்தம் செய்த ஃப்ரஷ் அத்திப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்க்கவும்.
  2. கூடவே நறுக்கிய ஆப்பிள், மாதுளைமுத்துகள், வாழைப்பழத் துண்டுகளைச் சேர்க்கவும். இவற்றுடன் துருவிய தேங்காய்த்தூளைச் சேர்க்கவும். கூடவே மிளகுத்தூள், தேனைச் சேர்த்து நன்கு பிரட்டவும். சுவையான அத்தி சாலட் தயார்.