fig

அத்திப்பழம் அல்வா

தேவையான பொருட்கள்:

  • அத்திப்பழம் — 100 கிராம்
  • பேரீச்சம்பழம் — 50 கிராம்
  • வெல்லம் — 150 கிராம்
  • ஏலக்காய்த்தூள் — ரு டீஸ்பூன்
  • பால் — 200 மி.லி.
  • நெய் — 2 மேசைக்கரண்டி
  • முந்திரி — 5
  • சுக்குத்தூள் — ரு டீஸ்பூன்
  • பாதாம் — 5

செய்முறை:

  1. வெது வெதுப்பான நீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைத்த நறுக்கிய அத்திப்பழம், பேரீச்சம்பழத்தை மிக்ஸியில் நன்கு மைய அரைக்கவும். கடாயில் நெய்யைச் சேர்த்து 1 மேசைக்கரண்டி நறுக்கிய முந்திரி, பாதாமை நன்கு வதக்கவும். வதக்கியவைகளை தனியே எடுத்து வைக்கவும்.
  2. அதே நெய்யில் அரைத்த விழுதைச் சேர்த்து கிளறவும். அதனுள் காய்ச்சியப்பாலைச் சேர்த்து கிளறவும். ஓரளவு திக்காகி கெட்டியானவுடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். அதனுள் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூளைச் சேர்க்கவும்.
  3. நெய்யில் வறுத்த முந்திரி, பாதாமைச் சேர்த்து கிளறவும். மீதமுள்ள நெய்யைச் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். சுவையான அத்திப்பழ அல்வா ரெடி.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *