Chettinad_Keerai_Mandi_Recipe_Chettinad_Style_Amaranth_Greens_Stew

அகத்திக்கீரை மண்டி

தேவையான பொருட்கள்:

  • அகத்திக்கீரை – ஒரு கட்டு
  • சின்ன வெங்காயம் – இருபது
  • பூண்டு – மூன்று பல்
  • பச்சை மிளகாய் – மூன்று
  • தக்காளி – ஒன்று
  • எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • கடுகு, உளுந்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – அரை டீஸ்பூன்
  • வரமிளகாய் – இரண்டு
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  • தேங்காய் – அரை மூடி
  • உப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • அரிசி கழுவிய நீர் – இருநூறு மில்லி

செய்முறை:

  1. முதலில் பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து இரண்டாகவும், பச்சை மிளகாயை வாய் பிளந்தும் வைக்கவும். தேங்காயைத் துருவி கெட்டியாக பாலெடுக்கவும். (இருநூறு மில்லி அளவிற்கு).
  2. கீரையை ஆய்ந்து கழுவி வைக்கவும். (நறுக்க வேண்டாம்) அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய் தாளிக்கவும். சிவந்ததும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.இரண்டு நிமிடம் கழித்து மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. பின் கீரையைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி அரிசி கழுவிய நீர், உப்பு சேர்த்து கீரை நன்கு வேகும்வரை கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய்ப் பாலை ஊற்றவும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து கீழே இறக்கவும். (கொதிக்க விடக்கூடாது).