dsc01927

அகத்திக்கீரை சூப்

தேவையான பொருட்கள்:

  • அகத்திக்கீரை – 1 கப்
  • துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
  • பச்சரிசி – 2 ஸ்பூன்
  • பூண்டு – 10 பல்
  • சின்ன வெங்காயம் – 15
  • தக்காளி நறுக்கியது – 2
  • கிராம்பு – 3
  • பட்டை – 1 சிறு துண்டு
  • உப்பு – தேவையான அளவு
  • சீரகம் – 1/4 ஸ்பூன்
  • மிளகுத்தூள் – தேவையான அளவு

செய்முறை:

  1. மேலே உள்ள எல்லா பொருட்களையும் (உப்பைத் தவிர) குக்கரில் போட்டு 4 தம்ளர் தண்ணீர் சேர்த்து 5 முதல் 6 விசில் வரும் வரை சமைக்கவும்.
  2. பிரஷர் அடங்கியதும் ஒரு கரண்டியால் நன்றாக மசிக்கவும். பின், மேலும் 2 தம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும்.
  3. பின் வடிகட்டிய தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
    சூப் பவுலில் சூப்பை நிரப்பி மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.