keeraikootu.jpg

அகத்திக்கீரைக் கூட்டு

தேவையான பொருட்கள்:

  • அகத்திக்கீரை – ஒரு கட்டு
  • சின்ன வெங்காயம் – 10
  • வரமிளகாய் – 3
  • சீரகம் – அரைத் தேக்கரண்டி
  • தேங்காய் – 3 சில்
  • உப்பு – ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து வெங்காயம், வரமிளகாய், கீரையைப் போட்டு வதக்கி, அரிசி களைந்த தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும். தேங்காயை அரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.