SONY DSC
SONY DSC

ஃப்ரைடு ப்ரோக்கோலி

தேவையான பொருட்கள்:

நறுக்கிய ப்ரோக்கோலி – 200 கிராம்
பச்சை குடை மிளகாய் – 1
மஞ்சள் குடைமிளகாய் – -1
மிளகுத்தூள் – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு – ஒரு மேசைக் கரண்டி
கரம் மசாலா – டீஸ்பூன்
எண்ணெய் – ஒருமேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – -1
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் சேர்த்துப் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய ப்ரோக்கோலி, பச்சை,மஞ்சள் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.3 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து காயை வேக விடவும். அதிக தண்ணீர் சேர்த்தால் ப்ரோக்கோலி குழைந்து விடும். கூடவே உப்பு, மிளகுத்தூள்,கரம்மசாலாவை சேர்த்து மிக்ஸ் செய்யவும். நன்கு வற வறவென வதக்கவும். நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளலாம் ஃப்ரைடு ப்ரோக்கோலி தயார்.
குறிப்பு :

சமைத்த காய்களின் சத்துக்கள் நம் உடலுக்கு முழுமையாகக் கிடைக்க, காய்கள் அரைபதம் வெந்தால் போதும். குக்கரில் வேக வைத்தால் சத்துக்கள் வீணாகாது.